News

எனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது.. .
பலாமரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பலாமரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 டிசம்பர், 2016

பலா மரம் நூல் வெளியீடு


          பலா மரம்




பஞ்சவர்ணம்



31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற பலாப்பழ 
திருவிழமற்றும் மதிப்புக் கூட்டுப் பயிற்சி விழாவில் திரு இரா.பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய தமிழ்நாட்டு தாவரக்களஞ்சியம் தொகுப்பில்10-ஆவது தாவரமாக
பலா மரம் என்னும் நூல் வெளியீடுதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
நடிகர் மற்றம் ஒளிப்பதிபாளர் திரு தங்கர்பட்சன் அவர்கள் வெளியிட
பேராசிரியர் மருதூர் அரங்கராசன் அவர்கள் பெற்றுக்கொண்டார்
உடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் 
திரு சபா. ராஜேந்திரன் B.Sc., B.E., சென்னை கிறித்துவக் கல்லூரி 
தாவரவியல் துறைத்தலைவர் முனைவர் து. நரசிம்மன் Ph.D.,
சென்னை கிறித்துவக் கல்லூரிதமிழ்த் துறைத்தலைவர் . பாலுச்சாமி Ph.D., 
புதுவை ஆரோவில் ஆரண்ய தே. சரவணன் அவர்கள்  



இந்த நூல் - ஓர் அறிமுகம்
தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் என்னும் தலைப்பில் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு நூல் என்னும் திட்டத்தின் அடிப்படையில், இதுகாறும் அரசமரம்ஜு, ‘சிறுதானியத் தாவரங்கள் (8-தாவரங்கள்)’ ஆகிய இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில்  ‘தமிழ்நாட்டுத் தாவரக்களஞ்சியத்தில்  பலாமரம் என்ற இந்த நூல் உங்கள் கைகளில் இப்போது தவழ்கிறது. அடுத்த வெளியீடாகக் கரும்பு, பனை, வேம்பு வெளிவர உள்ளன.

உள்ளடக்கம்
களஞ்சியம்
Ø  பலாமரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும்  உள்ளடக்கிய முழுமையான களஞ்சியமாக இந்நூல் திகழும்.
பெயர்கள்
Ø  இந்நூலின்கண் பலாமரத்தின் வகைப்பாட்டியல், தாவர விளக்கம், இதர வகைப்பாடு, ஆங்கிலப்பெயர்கள், தமிழ்ப்பெயர்கள், தாவரவியற் பெயர்கள், வழக்கத்திலுள்ள ஏனைய தமிழ்ப்பெயர்கள், பிறமொழிப்பெயர்கள் (ஆங்கிலத்தில்), இலக்கியங்களில் உள்ள தாவரத்தின் சிறப்புப் பெயர்கள், நிகண்டுகள், சித்தமருத்துவத் தொகைப் பெயர்கள் - போன்றவை கவனத்துடன் தொகுக்கப்பட்டு, நிரல்படத் தரப்பட்டுள்ளன.
பலாமரப் பாகங்களின் பயன்பாடுகள்
Ø  பலா இலை, பலாப்பிஞ்சு, கொத்துக்காய், காய், பழம், பலாப்பால், கொட்டை, பிசின், மரத்தின் பயன்பாடு, பலாச்சுளையின் பயன்பாடு, பலாவின் வேர்ப்பகுதி, பலாவில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் வேதிப்பொருட்கள் - போன்ற விவரங்கள் அனைத்தும்  தொகுக்கப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளன.
மேற்கோள்
Ø  சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், புராணங்கள் - போன்றவற்றில் பலாமரம் இடம்பெற்றுள்ள இடங்கள் பாடலடிகள் இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
Ø  வாய்மொழி இலக்கியங்களான பழமொழிகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல் (தாலாட்டு, காதல், தொழில், ஒப்பாரி - போன்றவை), சித்த மருத்துவப் பாடல், மருத்துவப் பாடல்கள்.
Ø  Dictionary of the Economic Products of India, Wealth of India போன்ற ஆங்கில நூல்களில் ஆங்கிலத்தில் கூறப்பட்டுள்ள செய்திகளை அப்படியே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்மீகம்
Ø  பலாமரத்தைக் தலமரமாகக் கொண்ட கோவில்கள், அக்கோயில்கள் அமைந்துள்ள இடங்கள், (அத்தலத்தின் இறைவன் பெயர், தலத்தின் சிறப்பு, அமைவிடத்தின் அஞ்சல் எண் உட்பட.) பலா மரத்தைத் தம்பெயரோடு இணைத்துக் கொண்ட தமிழக ஊர்கள் மற்றும் பிற மாநில ஊர்களின் பெயர்கள், பலாவின் பெயரைப் முன்னொட்டாகப் பெற்ற மாந்தரின் பெயர்கள் - போன்ற விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளன.
மருத்துவ நூல்கள்
Ø  பலாவின் மருத்துவப் பயன்பாடுகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. பலாவைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருந்து வகைகள், பயன்படுத்தப்படும் மருத்துவ முறைகளான நாட்டு வைத்தியம் - பாரம்பரிய வைத்தியம், சித்தா - போன்ற மருத்துவ முறைகளில் பலாமரம் பெறும் இடம் விளக்கப்பட்டுள்ளது.
Ø  மாந்தர்க்கான மருத்துவம் மட்டுமின்றி, விலங்கின மருத்துவத்திலும் பலாவின் பங்கு என்ன என்பது இந்நூலில் பேசப்பட்டுள்ளது.
Ø  குணப்பாடம், போகர் கருக்கிடை நிகண்டு 500, அற்புதச் சிந்தாமணி, அகத்தியர் வைத்தியக் காவியம், பதார்த்த குணம், எளிய வைத்திய முறைகள், குணபாடம் - தாதுசீவ வகுப்பு, சர்பத் தயாரிப்பு, வள்ளலார் மருத்துவம், விலங்கின வைத்தியம் - போன்ற மருத்துவ நூல்களில் பலா பெற்றுள்ள சிறப்பான இடங்கள் கண்டறியப்பட்டு இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
உணவும் பிறவும்
Ø  நேரடி உணவாகும் பலாவின் பாகங்கள் காட்டப்பட்டுள்ளன; பலாவிலிருந்து தயாரித்து உண்ணப்படும் உண்பொருட்களும் கூறப்பட்டுள்ளன; மனிதர்களுக்கே மட்டுமல்லாமல், விலங்கினம், கால்நடை போன்றவற்றிற்கு பலா பொருள்கள் எவ்வாறு உணவாகின்றன என்னும் விவரங்களும் விளக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களிலெல்லாம் ஆங்கிலத்தில் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
மொத்தத்தில்

Ø  தாவரப்பெயர்கள், மேற்கோள் இலக்கியங்கள், ஆன்மீக குறிப்புகள், மருத்துவப்பயன்கள், உணவுப்பயன்பாடுகள், வாழ்க்கைப் பயன்பாடுகள் - எனப் பலாமரம் பற்றிய முழுமையான தகவல்களைத் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் தருகின்ற களஞ்சியமாக இந்நூல் விளங்கும் என உறுதியாக நம்பலாம்.